மேலும் செய்திகள்
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
5 hour(s) ago
அதிக வெப்பத்தால் மதுரை வானில் வட்டமடித்த விமானம்
5 hour(s) ago
போலீஸ் செய்திகள்...
7 hour(s) ago
தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
7 hour(s) ago
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் ரவீந்திரன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் குணசீலன் வரவேற்றார். நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் வரலட்சுமி, உதவி பொறியாளர் கீதா பேசினர். துணை முதல்வர் சீனிவாசன், நாக் கமிட்டி இயக்குநர் விஜயகுமார், வேலைவாய்ப்பு அலுவலர் ஜெயந்தி, டீன் கவிதா பங்கேற்றனர். திட்ட அலுவலர்கள் செந்தில்குமார், பொன்ராஜ், ராகவன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். கருத்தரங்கு
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு கணினி அறிவியல் துறை சார்பில் வழிகாட்டுதல் மற்றும் தொழில் வாழ்க்கைக்கான பாதை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குநர் பிரபு முன்னிலை வகித்தனர். கணினி அறிவியல் துறை தலைவர் தேவிகா வரவேற்றார். மதுரை வின்வேஸ் ஓபன் சோர்ஸ் மென்பொருள் குழு தொழில்நுட்பத் தலைவர் செல்லபழனி பேசினார். பேராசிரியர்கள் ராஜ்குமார், செல்வகுமார் ஒருங்கிணைத்தனர். மாணவி லோகபிரியா நன்றி கூறினார். மாணவர்களுக்கு பயிற்சி
திருமங்கலம்: மதுரை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வில் தமிழ், ஆங்கிலம் பாடத்தில் தோல்வியுற்ற மாணவர்களுக்காக சிறப்பு பயிற்சி முகாம் 4 இடங்களில் நடந்தது. ஆங்கில பாடத்திற்கான வகுப்பு திருமங்கலம் பி.கே.என்., ஆண்கள் பள்ளியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை வகித்தார். அம்மாபட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குமரேசன், பி.கே.என்., ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மாரிராஜன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆய்வுமன்ற கருத்தரங்கு
மதுரை: தியாகராஜர் கல்லுாரியில் தமிழ்த்துறை ஆய்வு மன்றம் சார்பில் உதவி பேராசிரியை அன்பரசி தலைமையில் கருத்தரங்கு நடந்தது. துறைத் தலைவர் மலர்விழிமங்கையர்கரசி முன்னிலை வகித்தார். மாணவி வீரவள்ளி தொகுத்து வழங்கினார். மாணவி கிருத்திகா வரவேற்றார்.'ஐங்குறுநுாறு, கலித்தொகை நெய்தல் உரிப்பொருள்' என்ற தலைப்பில் மாணவர் காவேரிபாலன், 'காரியாபட்டி வட்டத்திற்குள் உட்பட்ட ஒப்பாரிப்பாடல்கள்' என்ற தலைப்பில் மாணவர் சபரிமுத்து ஆகியோர் கட்டுரை வாசித்தனர். மாணவி ரினிஷாகானா 'இப்படியும் சில மனிதர்கள்' என்ற சிறுகதை தொகுப்பு நுாலை அறிமுகம் செய்தார். மாணவி வரலட்சுமி நன்றி கூறினார்.
5 hour(s) ago
5 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago