பள்ளி கல்லுாரி செய்திகள்
புத்தக வெளியீடு மதுரை: ஆங்கில துறை பேராசிரியர் வெங்கடேஷ் எழுதிய 'அவாய்ட் தீஸ் 500 காஸ்ட்லி மிஸ்டேக்ஸ் இன் இங்கிலீஷ்' என்ற புத்தகத்தை மதுரை கல்லுாரியில் முதல்வர் சுரேஷ் வெளியிட, பேராசிரியர் கருணாகரன் பெற்றார். முன்னாள் துணைவேந்தர் கருணாகரன், சுயநிதிப் பிரிவு தலைவர் நாகராஜன் பங்கேற்றனர். பேராசிரியர் வெங்கடேஷ் ஏற்புரையாற்றினார். பேராசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார். கருத்தரங்கு திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தமிழ் உயராய்வு மையம் சார்பில் கருத்தரங்கு நடந்தது. முதல்வர் ராமசுப்பையா துவக்கி வைத்தார். மைய பேராசிரியர்கள் தேவிபூமா, மல்லிகா, முனியசாமி முன்னிலை வகித்தனர். மாணவி நிகிலா வரவேற்றார். பழைய, புதிய, பெருங்கற்காலம், பழந்தமிழரின் திணை வாழ்வியல், கல்வி, கலைகள் சங்க கால ஆட்சி முறை, விளையாட்டுகள், தமிழகத்தில் நிகழ்ந்த அகழாய்வுகள், மூவேந்தர் வரலாறு, தமிழகத்தில் ஐரோப்பியர்களின் வருகை, வாணிப முறை குறித்து மாணவர்கள் பேசினர். மாணவி திவ்யபாரதி தொகுத்துரைத்தார். பேராசிரியர் திருஞானசம்பந்தம் ஒருங்கிணைத்தார். மாணவி புவனேஸ்வரி நன்றி கூறினார். கலாசார கொண்டாட்டம் திருப்பரங்குன்றம்: பி.எம். ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கலை உற்சவ் 2025 கலாசார கொண்டாட்டம் துவங்கியது. சென்னை மண்டல துணை கமிஷனர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். உதவி கமிஷனர் மினி முல்லத் பேசினார். திருப்பரங்குன்றம் கே.வி. பள்ளி முதல்வர் லட்சுமி நாராயணன் வரவேற்றார். பி.எம். ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா நரிமேடு பள்ளி முதல்வர் மனோஜ்குமார் பாலிவால், தலைமை ஆசிரியர் முருகன் கலந்து கொண்டனர். ஒருமைப்பாடு, கலாசாரப் பெருமை, தன்னம்பிக்கை தலைப்புகளில் குழு நடனம், குழு பாடல், தனிநபர் பாடல், தனிநபர் நடனம், கதை சொல்லுதல், ஓவியம் வரைதல் உட்பட 16 போட்டிகளில் சென்னை மண்டலத்தின் ஆறு கிளஸ்டர்களில் இருந்து 306 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா தலைமை ஆசிரியர் அமுதா ஒருங்கிணைத்தார். துணை முதல்வர் லோகநாதன் நன்றி கூறினார். சென்னையில் அக்டோபரில் நடக்கவுள்ள தேசிய அளவிலான ராஷ்ட்ரிய ஏக்தா பர்வ் மற்றும் கலை உற்சவ் 2025ல் பங்கேற்கும் மாணவர்களை தேர்வு செய்வதற்காக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.