உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி மானிய ஒதுக்கீடுகள் தலைமையாசிரியர்கள் புலம்பல் தலைமையாசிரியர்கள் புலம்பல்

பள்ளி மானிய ஒதுக்கீடுகள் தலைமையாசிரியர்கள் புலம்பல் தலைமையாசிரியர்கள் புலம்பல்

மதுரை:கல்வித்துறையில் பள்ளி மானிய ஒதுக்கீடுகள் உரிய நேரத்தில் கிடைக்காததால், தலைமையாசிரியர் தங்கள் சொந்த பணத்தை செலவிட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். ஆனால், பணி முடிந்த பின் செலவிட்ட தொகையை திரும்ப பெறுவதற்குள், படாதபாடு படவேண்டியுள்ளதாக தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு அரசு பள்ளிக்கு, 10,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை ஆண்டுதோறும் பள்ளி மானியம் ஒதுக்கப்படுகிறது. துாய்மை பணி, காய்கறி தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட 10 வகை மானியங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதன் வாயிலாக வளாக பராமரிப்பு, துாய்மை, புதுப்பித்தல், வகுப்பறை உபகரணங்கள் மராமத்து, கழிப்பறை மராமத்து உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.இதற்காக மானிய ஒதுக்கீடு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அதிகாரிகள் உடனடியாக விடுவிப்பதில்லை. அதற்குள் பணிகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவிடுகின்றனர். இதனால் வேறு வழியின்றி சொந்த பணத்தை அவர்கள் செலவிட வேண்டியுள்ளது.விடுவிக்கப்படும் ஒதுக்கீட்டு தொகையை பல மாதங்களுக்கு பின் தலைமையாசிரியர் சொந்த வங்கி கணக்கு மூலம் பெறுகின்றனர். அதற்கும் சேர்த்து வருமான வரி செலுத்த வேண்டி உள்ளது. இதனால் தேவையின்றி சேமிப்பு இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது.தலைமையாசிரியர்கள் கூறியதாவது:துாய்மை பணிக்கான மானியம் ஒதுக்கப்பட்டது. பணம் விடுவிக்கவில்லை. நாங்கள் தான் சொந்த பணத்தை செலவிட்டோம். பிப்ரவரி, மார்ச் என கடைசி நேரத்தில் பல லட்சம் ரூபாய் மானியத்தை விடுவித்து, ஒரு வாரத்தில் செலவிட்டு உரிய அறிக்கை தாக்கல் செய்ய நெருக்கடி கொடுக்கின்றனர். இதனால் திட்டமிட்டு செலவிட முடியவில்லை. மானியங்களை முன்கூட்டி வழங்கி, திட்டமிட்டு செலவிட அவகாசம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ