உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி புத்தாக்க திட்டம்

பள்ளி புத்தாக்க திட்டம்

மதுரை : தமிழகத்தில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம், பள்ளிக் கல்வித்துறை, யுனிசெப் சார்பில் செயல்படுத்தப்படுகிறது. இந்நிதியாண்டில் 7732 அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகள் இதில் பதிவு செய்துள்ளன. இப்பள்ளிகளில் வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, பயிற்சி வழங்கி, தங்கள் கற்றல் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இதையடுத்து 46 ஆயிரத்து 189 அணிகள் புத்தாக்க கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்துள்ளன.இவை மதிப்பீட்டாளர்கள் மூலம் 730 கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் 25 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவர்களின் கண்டுபிடிப்புகளை முன்மாதிரியாக உருவாக்க 2 நாள் பயிற்சி முகாம் அண்ணா பல்கலை மையத்தில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் அசோக்குமார், பல்கலை டீன் லிங்கத்துரை பங்கேற்றனர். திட்டமேலாளர் அர்ச்சனா, 25 குழுக்களைச் சேர்ந்த 114 மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். மாணவர்களின் செயல்வடிவங்களை பார்வையிட்டு கலெக்டர் சங்கீதா பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !