மேலும் செய்திகள்
மதுரையில் குடியரசு தின கோலாகலம்
27-Jan-2025
கருத்தரங்குமதுரை: பாத்திமா கல்லுாரியில் நாஞ்சில் அகாடமி சார்பில் வெளிநாட்டு மொழிகளால் உருவாகக்கூடிய வேலைவாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு நடந்தது. பிரெஞ், ஜெர்மன் மொழி பயிற்றுநர் மார்டின் பவர்ஸ் 'வெளிநாட்டு மொழிகள் கற்றுக்கொள்வது சிறந்த முதலீடு' என்ற தலைப்பில் பேசினார். 'ஜப்பான் மொழியால் ஏற்படக்கூடிய அறிவாற்றல்' தலைப்பில் ஜப்பான் இன்ஸ்டிடியூட் இயக்குனர் விமலா, கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினர் பீட்ரைஸ் ரீஜியன், ராபார்ட்டோ மார்கோரி, அகாடமி இயக்குனர் ஜோஸ் ராபின்சன், முதல்வர் செலின் சகாயமேரி, துணை முதல்வர் அருள்மேரி பங்கேற்றனர்.கல்லுாரி விளையாட்டு விழாசோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரி, மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா போட்டிகள் நடந்தது. மதுரை காமராஜர் பல்கலை முன்னாள் உடற்கல்வி துறை தலைவர் சந்திரசேகரன் துவக்கி வைத்தார். பரிசளிப்பு விழாவில் கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர் நிரேந்தன், பிரபாகரன் ஆண்டறிக்கை வாசித்தனர். மாணவர் ராமர் வரவேற்றார்.திருச்சி திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன தலைவர் சுவாமி சுத்தானந்த தலைமையில் உப தலைவர் நியமானந்த பேசினார். செயலர் ஸத்யானந்த, பொருளாளர் ருத்ரானந்த, பள்ளி செயலர் பரமானந்த, கல்லுாரி செயலர் வேதானந்த, குலபதி அத்யாத்மானந்த முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் கார்த்திகேயன், முதன்மையர் ஜெயசங்கர், அகத்தர மைய மற்றும் குருகுல ஒருங்கிணைப்பாளர்கள் சதீஷ்பாபு, சந்திரசேகரன், தலைமை ஆசிரியர் மாதவன், உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர் குருசங்கர் நன்றி கூறினார்.பள்ளி ஆண்டு விழாதிருப்பரங்குன்றம்: திருநகர் அமிர்த வித்யாலயம் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் சசிரேகா ஆண்டறிக்கை வாசித்தார். மேலாளர் ஆதிகேசவன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு கல்சுரல் அகாடமி பொருளாளர் விஜயபாரதி பேசினார். பழங்குடியினர் கலாசாரம் என்ற தலைப்பில் மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.சிறந்த மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக பரிசுகள் வழங்கப்பட்டது.
27-Jan-2025