உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம்

பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம்

மதுரை: மதுரை எல்.கே.பி., நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் தலைவர் தஸ்லீம் பானு தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் அருவகம் வரவேற்றார். போதைப்பொருள் இல்லா பள்ளி வளாகம், அஞ்சலக கணக்கு தொடங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன. கருத்தாளர் சேதுராஜன் பள்ளியின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு குறித்து பேசினார். ஆசிரியை விஜயலட்சுமி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ராஜ வடிவேல் நன்றி கூறினார். குழு உறுப்பினர்கள், ஆரோக்கியா நலவாழ்வு அறக்கட்டளை பணியாளர் கலைவாணி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி