உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.2.50 கோடியில் அறிவியல் மையம்

ரூ.2.50 கோடியில் அறிவியல் மையம்

மதுரை: மதுரை மாநகராட்சி சார்பில் புதுஜெயில் ரோடு பழைய மீன் மார்க்கெட் இடத்தில் ரூ.2.50 கோடியில் அறிவியல் மையம் அமைக்க தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் தியாகராஜன் தலைமையில் நடந்தது.மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர். இந்த அறிவியல் மையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்விச்செயல்பாடுகளை வழங்கும். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் சோதனைகளுக்கான ஆய்வகங்கள், இயந்திர மாதிரிகள், அதிநவீன கணினி வசதி ஏற்படுத்தப்படும்.அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இலவசம். மற்றவர்களுக்கு நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்படும்.அமைச்சர் தியாகராஜன் பேசுகையில், கல்வியும், சுகாதாரமும் தமிழகத்தின் இரு கண்கள் என முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். ஆண்டுக்கு ஆயிரத்துக்கும்மேற்பட்ட மாணவர்களுக்கு நேரடி அறிவியல் அனுபவம் கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது இதற்கான பல தடைகளை தாண்டி முயற்சி மேற்கொண்ட கமிஷனர் பாராட்டுகுரியவர் என்றார்.துணைமேயர் நாகராஜன், பி.ஆர்.ஓ.,க்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், தனியார் நிறுவன நிர்வாகிகள்,மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை