மேலும் செய்திகள்
மன்னர் கல்லுாரியில் வர்த்தக கண்காட்சி
17-Jan-2025
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு கணினி அறிவியல் துறை, தகவல் தொழில்நுட்ப துறை, கணினி பயன்பாட்டு துறை, செயற்கை நுண்ணறிவியல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி 'டெக் கேம்பஸ்' என்ற தலைப்பில் நடந்தது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். முதல்வர் ராம சுப்பையா, பிரபு முன்னிலை வகித்தனர். செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார். 50க்கும் மேற்பட்ட பள்ளிகளின் 1,200 மாணவர்கள் பங்கேற்றனர். கணினி அறிவியல் துறை தலைவர் தேவிகா, தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் கார்த்திகா, கணினி பயன்பாட்டு துறை தலைவர் முத்துலட்சுமி, செயற்கை நுண்ணறிவியல்துறை தலைவர் வாசுகி ஏற்பாடுகளை செய்தனர். பேராசிரியர்கள் வனிதா, ஹேமாவதி, பவானி, விஷ்ணு பிரியா ஒருங்கிணைத்தனர். உயர்கல்வி வழிமுறை ஆலோசனை, வி.ஆர். தொழில்நுட்பத்தில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
17-Jan-2025