உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருநகர் பூங்காவில் அறிவியல் சாதனங்கள் * தினமலர் செய்தி எதிரொலி

திருநகர் பூங்காவில் அறிவியல் சாதனங்கள் * தினமலர் செய்தி எதிரொலி

திருநகர்: தினமலர் செய்தி எதிரொலியாக திருநகர் பூங்காவில் அறிவியல், கணிதம், பொறியியல் சாதனங்கள் பொருத்தும் பணி துவங்கியது. திருநகர் மத்தியில் உள்ள அண்ணா பூங்காவை ரூ. 2.57 கோடியில் அறிவியல் பூங்காவாக மாற்ற மார்ச்சில் பூமி பூஜை நடந்தது. அதன்பின் பணிகள் துவங்கவில்லை. இச்செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. இதையடுத்து பணிகளை மாநகராட்சி துவக்கி உள்ளது. தற்போது அண்ணா பூங்காவில் ஹாக்கி, கைப்பந்து, பூப்பந்து விளையாட்டு மைதானங்கள் உள்ளன. இந்த மைதானங்களை நவீனப்படுத்துவதுடன், அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், பொறியியல் தொடர்புடைய சாதனங்களை, கற்றல் கருவிகளாக நிரந்தரமாக அமைக்கப்படுகிறது. பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரிகள், இயற்பியல், ரசாயனம், உயிரியல், கணிதம் தொடர்புடைய கோட்பாடுகள், விதிகள், நடைமுறை பயன்பாடுகள், விளையாட்டு மூலம் கற்றல், ஆசிரியர்களின் விளக்க உரை, செயல்முறை கூட்டங்கள் நடத்தவும், அறிவியல் வினாடி வினா, அறிவியல் கண்காட்சிகள் நடத்தவும் ஏதுவாக பல்நோக்கு மையம், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.2 கோடியே 57 லட்சத்து 78 ஆயிரத்து 570 செலவில் அறிவியல் பூங்காவாக மாற்றப்படுகிறது. முதற்கட்டமாக சேதமடைந்த சிறுவர்கள் விளையாட்டு சாதனங்கள் முழுவதும் அகற்றப்பட்டு புதிய விளையாட்டு சாதனங்கள் அமைத்தனர். பூங்காவின் முன் பகுதியில் அறிவியல், கணிதம், பொறியியல் சம்பந்தமான சாதனங்களை பொருத்தும் பணி நேற்று துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !