உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாவட்ட நிர்வாகம் மீது எஸ்.டி.பி.ஐ., குற்றச்சாட்டு

மாவட்ட நிர்வாகம் மீது எஸ்.டி.பி.ஐ., குற்றச்சாட்டு

மதுரை: 'திருப்பரங்குன்றம் மலை விவகாரத்திற்கு போலீஸ், மாவட்ட நிர்வாகங்களே காரணம்' என, எஸ்.டி.பி.ஐ., மாநில தலைவர் நெல்லை முபாரக் குற்றம் சாட்டியுள்ளார்.மதுரையில் அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் விஷயத்தில் நுாறு ஆண்டுகளுக்கு முன் லண்டன் பிரிவி கவுன்சில் உட்பட பல்வேறு காலகட்டங்களில் வெளியான நீதிமன்ற தீர்ப்புகள் யார், யாருக்கு மலையின் எந்தெந்த பகுதியில் உரிமையுள்ளது என உறுதிபடுத்தியுள்ளன. முஸ்லிம்கள் தீர்ப்பின் அடிப்படையிலான வழிபாட்டு உரிமையையே முன்வைக்கின்றனர்.சிக்கந்தர் தர்காவுக்கு நேர்த்திக்கடன் செய்ய வந்தவர்களை தடுத்த போலீசார், மாவட்ட நிர்வாகத்தினரின் அணுகுமுறையே இப்பிரச்னைக்கு காரணம். இவ்விவகாரத்தில் வெறுப்பு பிரசாரத்தைத் தடுத்து நிறுத்துவதில் மாவட்ட நிர்வாகம், போலீசார் தோல்வியடைந்துள்ளனர். நவாஸ்கனி எம்.பி., ஆதரவாளர்கள் பிரியாணி சாப்பிட அனுமதி வழங்கியது போலீஸ் கமிஷனர். தற்போது அ.தி.மு.க., மீது பழிசுமத்த பார்க்கின்றனர்.முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட, 1991 வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள வக்பு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை