உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் 144 தடை உத்தரவு

மதுரையில் 144 தடை உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விழாவையொட்டி சட்டம் ஒழுங்கு பிரச்னையைத் தவிர்க்க மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தீபத்துாணில் இன்று (நவ.,24) தீபம் ஏற்றும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரையில் 144 தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று இரவு 9:00 மணி முதல் நவ.25 காலை 10:00 மணி வரை பொதுக்கூட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தவும், திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம், இறுதிச்சடங்கு, மத வழிபாடுகள், அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெற்று நடத்தப்படும் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கும் நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படும் என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை