உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  புது பாலத்தில் தேவை பாதுகாப்பு

 புது பாலத்தில் தேவை பாதுகாப்பு

திருமங்கலம்: திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகிலுள்ள கிராசிங்கில் புதிதாக ரூ. 38 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி மக்களின் போக்குவரத்து மிகவும் எளிதாகியுள்ளது. இந்நிலையில் விமான நிலைய ரோட்டில் இருந்து திருமங்கலம் நகருக்குள் பாலம் இறங்கும் இடத்தில் தேவர் சிலை உள்ளது. அந்த இடத்தில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இருந்தும் பாலத்தில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள் நேரடியாக திருமங்கலம் - விருதுநகர் ரோட்டில் வந்து சந்திப்பதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே பாலம் இறங்கும் இடத்தில் சிறிய அளவிலான தொடர் வேகத்தடைகளை அமைக்க வேண்டும். இதனால் வாகனங்களின் வேகம் குறைக்கப்பட்டு விபத்து அபாயம் தவிர்க்கப்படும். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிறிய அளவிலான தொடர் வேகத்தடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை