மேலும் செய்திகள்
வேளாண் குழுவில் 2.8 டன் தேங்காய் விற்பனை
18-Dec-2024
மதுரை : மதுரை விற்பனை குழுவின் கீழ் செயல்படும் உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மத்திய அரசின் இ-- நாம் முறையில் மறைமுக ஏலத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய்கள் விற்கப்பட்டன.பெரிய காய்கள் ரூ.16.50க்கும், சிறிய காய்கள் ரூ.9க்கும் தோப்பிலேயே விலை கோரப்பட்டு ரூ. ஒரு லட்சத்து 28ஆயிரத்து 850க்கு விற்கப்பட்டு விவசாயி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இ--நாம் மறைமுக ஏலத்தில் விற்று கூடுதல் லாபம் ஈட்டலாம் என மதுரை விற்பனைக் குழு செயலாளர் அம்சவேணி தெரிவித்தார். விளைபொருள் விற்பனைக்கு 95667 01374ல் தொடர்பு கொள்ளவும்.
18-Dec-2024