மேலும் செய்திகள்
கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கம்
01-May-2025
மதுரை: மதுரை மடீட்சியாவில் வர்த்தக தகவல் மையம், தேசிய வாழை ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு உணவுப் பதப்படுத்துதல் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் சார்பில் வாழையில் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரித்தல், நிலைத்தன்மை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மடீட்சியா தலைவர் கோடீஸ்வரன் தலைமை வகித்தார்.ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் சுரேஷ் குமார், சிவானந்த் ஆகியோர் வாழையின் மதிப்பை மேம்படுத்தும் வகையில் புதிய யோசனைகள், முன்னேற்றங்கள், நிலையான வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகள், தொழில்முனைவோருக்கு விளக்கினர். மேம்பாட்டுக் கழக சேவைகள், திட்டங்கள் குறித்து அதன் முதன்மை மேலாளர் கவிமுகில் விளக்கினார்.வர்த்தக மைய ஒருங்கிணைப்பாளர் சியாம் நாராயணன் நன்றி கூறினார். 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
01-May-2025