கருத்தரங்கு
திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் 'கீழடி நேற்று இன்று நாளை' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி தலைவர் பன்சிதர் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முதல்வர் பொன்னி முன்னிலை வகித்தனர். தமிழ்த் துறை தலைவர் உமா மகேஸ்வரி அறிமுக உரையாற்றினார். மாணவி கோபி கபிலா வரவேற்றார். செயலாளர் குமரேஷ், பேராசிரியர் முருகேசன் பேசினர். மாணவி பிரியா நன்றி கூறினார்.