உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தண்ணீரில் தத்தளிக்கும் செமினிபட்டி பள்ளி

தண்ணீரில் தத்தளிக்கும் செமினிபட்டி பள்ளி

மேலுார்: செமினிபட்டியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வெளுத்து கரைப்பட்டி உட்பட 5 கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். வடிகால் வசதி இல்லாததால் பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதை கடந்து மாணவர்கள் வகுப்பறைக்கு செல்லும் போது வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். மழைநீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தீர்வுகாண வேண்டும் என பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ