உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சா வழக்கில் தண்டனை

கஞ்சா வழக்கில் தண்டனை

மதுரை: தேனி மாவட்டம் கம்பம் முருகன் 51. கம்பம் வடக்கு போலீசார் 2016 ல் ரோந்து சென்றபோது இவரிடம் சோதனையிட்டனர். அவர் ஒரு பையை கீழே போட்டுவிட்டு, போலீசாரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடினார். பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது. தலைமறைவான முருகனை கைது செய்தனர். இனக்கலவர தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரத்னா உத்தரவிட்டார்.அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !