உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வடக்கு தெருவில் தேங்கும் கழிவுநீர்

வடக்கு தெருவில் தேங்கும் கழிவுநீர்

பாலமேடு: பாலமேடு பேரூராட்சி வடக்கு தெருவில் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரம் பாதிக்கிறது. இப்பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிகால் வழியாக வலையபட்டி மெயின் ரோட்டில் உள்ள வடிகாலில் கலக்கிறது. இதில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால் கழிவுநீர் செல்ல முடியாமல் தெருவில் 10 அடிக்கு மேல் தேங்கி நிற்கிறது. மழை நேரங்களில் கழிவுநீர் கூடுதலாகி அரை அடிக்கு தேங்குவதால் சுகாதாரம் பாதிக்கிறது. புழு, பூச்சிகள் வீடுகளுக்குள் படை எடுக்கின்றன. துர்நாற்றத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர். அப்பகுதி ஜெயா கூறுகையில், ''பேரூராட்சியில் புகார் தெரிவித்தால் பார்வையிட்டு சரி செய்கின்றனர். ஆனாலும் மீண்டும், மீண்டும் அடை ப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குகிறது. என் வீட்டில் விசேஷம் நடக்க உள்ளதால், பேரூராட்சி பணியாளர்களுக்காக காத்திருக்காமல் நானே கழிவுநீரை அகற்ற உள்ளேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை