உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கழிவுநீர் தேக்கம்: சுகாதாரம் பாதிப்பு

கழிவுநீர் தேக்கம்: சுகாதாரம் பாதிப்பு

வாடிப்பட்டி: வாடிப்பட்டி பேரூராட்சி தாதம்பட்டி மந்தையில் வடிகாலில் தேங்கும் கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதாரம் பாதித்துள்ளது.இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ரோட்டில் உள்ள வடிகாலில் ஓடாமல் தேங்குகிறது. அதேநேரம் மந்தையில் உள்ள பேரூராட்சி கழிப்பறை நிரம்பி வெளியேறும் கழிவுகளும் இந்த வடிகாலில் விடப்படுகிறது.இதன் அருகே அங்கன்வாடி மையங்கள், துவக்கப்பள்ளி ஆகியவை உள்ளன. கழிவு நீர் வெளியேறாமல் வடிகால் கட்டட விளிம்பு வரை தேங்கி புழுக்கள், கொசு, பூச்சிகள் உற்பத்தியாகின்றன. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று பரவும் நிலை உள்ளது. மழை நேரங்களில் கழிவுநீர் அப்பகுதி மந்தையில் தேங்குகிறது.இப்பகுதியை கடந்து செல்ல துவக்கப் பள்ளி, அங்கன்வாடி மைய மாணவர்கள் சிரமப்படுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் கழிவு நீர் தேங்காமல் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ