உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வடிகால் இன்றி தேங்கும் கழிவுநீர்

வடிகால் இன்றி தேங்கும் கழிவுநீர்

அலங்காநல்லுார்:அலங்காநல்லுார் ஒன்றியம் வாவிடமருதுாரில் வடிகால் இன்றி உறிஞ்சு குழியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரம் பாதிக்கிறது. இங்குள்ள வடக்கு தெருவில் வீடுகளின் கழிவுநீர் செல்ல பிரதான வடிகால் வசதி இல்லை. ஏற்கனவே இருந்த வடிகால் துார்ந்து மண் மேவியது. இந்நிலையில் இதன் குறுக்கே 4 ஆண்டுகளுக்கு முன் உறிஞ்சு குழி அமைத்தனர். இதில் பாலிதீன், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி உள்ளன. மழை நேரங்களில் கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !