/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: தடை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: தடை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரை ராகுல். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: உத்தங்குடி 'லேக்ஏரியா'வில் மாநகராட்சி சார்பில் பாதாளச் சாக்கடை பணி நடக்கிறது. நுாலகம், பூங்கா, விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட பொது பயன்பாட்டிற்குரிய இடம் உள்ளது. இதற்கு உள்ளூர் திட்டக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது விதிமீறலாகும். நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கும். சுகாதாரக்கேடு ஏற்படும். சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை மாநகராட்சி கமிஷனர் 12 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.