உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; கைதான 58 வயது சிறப்பு எஸ்.ஐ., சஸ்பெண்ட்

மதுரையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; கைதான 58 வயது சிறப்பு எஸ்.ஐ., சஸ்பெண்ட்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகையன்று பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ., ஜெயபாண்டி, 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கைதான நிலையில் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலை விவகாரத்தால் இப்பிரச்னை குறித்து போலீசார் ரகசியம் காத்து வருகின்றனர்.மதுரை திடீர்நகர் குற்றப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ., ஜெயபாண்டி 58. டிச. 13ல் திருக்கார்த்திகையன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்பட்டது. இதற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு சுவாமி தரிசனத்திற்கு வந்த 14 வயது சிறுமியிடம் பேச்சு கொடுத்தார். பின்னர் கழிப்பறைக்கு சிறுமி சென்றபோது ஜெயபாண்டியும் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சியடைந்த சிறுமி, அழுது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார்.அவர்கள் உடனே 'சைல்டு லைனுக்கு' தகவல் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் விசாரித்தனர். உண்மை என தெரியவந்ததை தொடர்ந்து போக்சோ சட்டத்தில் 4 பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து ஜெயபாண்டியை கமிஷனர் லோகநாதன் 'சஸ்பெண்ட்' செய்தார்.ஜெயபாண்டி போன்றோரால் போலீஸ் துறைக்கு களங்கம் என்றாலும் மற்ற போலீசாருக்கு எச்சரிக்கும் விதத்திலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்தது குறித்து தெரிவிக்காமல் உயரதிகாரிகளின் உத்தரவுபடி போலீசார்

ரகசியம் காத்து வந்துள்ளனர்.

அண்ணா பல்கலை மாணவி மீதான பாலியல் சீண்டல் விவகாரம் தமிழக அளவில் விஸ்வரூபம் எடுத்ததால், ஜெயபாண்டி விவகாரம் குறித்து பத்திரிகைகளுக்கு தெரிவித்தால் சம்பந்தப்பட்ட போலீசார் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவார்கள் என வாய்மொழியாக அதிகாரிகள் எச்சரித்ததால் இந்த விஷயம் வெளியே கசியாமல் இருந்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பேசும் தமிழன்
ஜன 12, 2025 22:14

விடியல் ஆட்சியில் குற்றம் செய்ய.... யாரும் தயங்குவதில்லை.... வேலியே பயிரை மேய்ந்த கதை தான் இங்கே நடந்து இருக்கிறது..... குற்றவாளி நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் மற்றும் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.


Raj
ஜன 12, 2025 18:00

விடியல் ஆட்சியில் போலீஸ்காரன் உங்கள் நண்பன் அல்ல கள்வன். 58 வயசுல ஆடுது. வெட்டணும்டா விரல் நகத்த சொன்னேன்... வெட்கக்கேடு.


Raj
ஜன 12, 2025 18:03

விடியல் ஆட்சியில் போலீஸ்காரன் உங்கள் நண்பன் அல்ல கள்வன். 58 வயசுல ஆடுது. வெட்டணும்டா விரல் நகத்த சொன்னேன்... வெட்கக்கேடு.


பேசும் தமிழன்
ஜன 12, 2025 13:46

இதை தான் வேலியே பயிரை மேய்ந்தது என்பார்கள்.. விடியல் ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா.... குற்றம் செய்பவர்களை பிடிக்க வேண்டிய காவல்துறையே... குற்றவாளி கூண்டில் ஏறி நிற்கிறது.


rasaa
ஜன 12, 2025 09:41

அதுதான் ராமசாமி கூறியதாக கூறப்படுவதுபோல் வீட்டில் உள்ளோரிடம் நடந்து பெற்றுக்கொள்ளளாமே. காவல் துறை இனி பலான துறை என்று அழைக்கப்படுமா?


அப்பாவி
ஜன 12, 2025 08:16

அந்த சார் மாதிரியே இருக்கே.


pandit
ஜன 12, 2025 07:05

காவல்துறையின் சிறப்பான செயல்பாடு. சட்டம் ஒழுங்கு " கட்டுப்பாட்டில்" உள்ளது .


முக்கிய வீடியோ