உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஷாம்பூ தயாரிப்பு: இலவச பயிற்சி

ஷாம்பூ தயாரிப்பு: இலவச பயிற்சி

மதுரை: இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் நிறுவனம் சார்பில் மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்குவாசல் பெட்கிராட் அறக்கட்டளையில் ஷாம்பூ, சோப்பு தயாரிப்பு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.மூலிகை, காஸ்டிக் சோடா, கிளிசரின் வகை சோப்புகள், சலவை சோப்பு, துாள், திரவம் தயாரிப்பு, பாத்திரம் துலக்கும் திரவம், பினாயில், சோப் ஆயில், ஹேண்ட் வாஷ், ஷாம்பூ, லிப் பாம் தயாரிப்பது குறித்து 26 நாட்கள் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் ஆதார் அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், போட்டோவுடன் பெயரை பதிவு செய்யலாம்.பயிற்சிக்கான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். சான்றிதழ் பெற்று தொழில் துவங்கலாம். வங்கி கடனுதவிக்கு வழிகாட்டப்படும். அலைபேசி: 90950 54177.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி