மேலும் செய்திகள்
ஆதிசங்கரர் ஜெயந்தி விழா :மகா ருத்ர ஏகாதசி பூஜை
22-Apr-2026
சோழவந்தான்: முள்ளிப்பள்ளம் காஞ்சி காமகோடி பீடத்தில் சங்கர ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கோ, விக்னேஸ்வர, ஆதிசங்கர பூஜை நடந்தது. தொடர்ந்து தைத்ரிய உபநிஷத் பாராயணம், தோடகாஷ்டகம், மஹா தீபாராதனை நடந்தது. ஹிந்து மிஷன் மருத்துவமனைச் செயலர் ராமசுப்பிரமணியம் புதிய ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி வித்யாசாலா கட்டடத்தை திறந்து வைத்தார். வேதகோஷங்கள் முழங்க ஆதிசங்கரர் உருவப்படம் வீதியுலா நடந்தது. 'பக்தி' எனும் தலைப்பில் லதா பேசினார். அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகி ஸ்ரீகுமார், அர்ச்சகர் வெங்கட்ராமன், ஆசிரியர்கள் வீரமணிகண்டன், முத்துப்பாண்டி ஏற்பாடு செய்தனர்.
22-Apr-2026