மேலும் செய்திகள்
குன்றத்தில் ஐப்பசி பூரம்
28-Oct-2024
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி விழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சாந்தாபிஷேகம் நடந்தது.உற்ஸவர் சுவாமி, தெய்வானை திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினர். சுவாமி முன்பு தங்கம், வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பி பூஜை நடந்தது. பின்பு பஞ்ச கவ்யம், 108 லிட்டர் பால், 108 இளநீர், கரும்பு சாறு, எலுமிச்சை பழச்சாறு உள்ளிட்ட பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து சுவாமிக்கு தங்க குடம், தெய்வானைக்கு வெள்ளி குடங்களிலிருந்த புனித நீர் அபிஷேகம் நடந்தது. பின்பு புஷ்ப அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
28-Oct-2024