உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடிநீர் தொட்டியில் கும்மாளம் போடும் சிறுவர்கள் அல்லிகுண்டத்தில் அதிர்ச்சி வீடியோ வைரல்

குடிநீர் தொட்டியில் கும்மாளம் போடும் சிறுவர்கள் அல்லிகுண்டத்தில் அதிர்ச்சி வீடியோ வைரல்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி சிறுவர்கள் சிறுநீர் கழித்தும், குளித்தும் விளையாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உசிலம்பட்டி அல்லிகுண்டம் கிராமத்தில் 1500க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு மத்திய அரசின் ஜே.ஜே.எம்., திட்டத்தின் கீழ் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி அமைக்க 2022--23 ல் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகள் நடந்து முடிவுக்கு வந்துள்ளது.தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முன், அதன் உறுதித் தன்மையை பரிசோதிக்கவும், நீர் கசிவு உள்ளதா என்று பார்க்கவும், சோதனை நடவடிக்கையாக தண்ணீரை தேக்கியுள்ளனர்.சில தினங்களுக்கு முன்பு இந்த தொட்டியின் மேல் பகுதிக்கு ஏறிய 4 சிறுவர்கள், தொட்டிக்குள் விளையாட்டுத்தனமாக சிறுநீர் கழிப்பது, குடிநீர் தொட்டிக்குள் இறங்கி குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்தக் காட்சிகள் வைரலானதால் கிராமத்தினர் அதிர்ச்சிக்குள்ளாயினர்.வேங்கைவயல் சம்பவம் போன்று அல்லி குண்டம் நீர்த்தேக்கத் தொட்டியிலும் நடந்துள்ளது. ஊராட்சி அதிகாரிகள் குடிநீர் தொட்டிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தும், சிறுவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !