உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாடக மேடையை பாழடைய விடலாமா

நாடக மேடையை பாழடைய விடலாமா

சோழவந்தான் : கீழப்பெருமாள்பட்டியில் நாடக மேடை பராமரிப்பின்றி பாழடைந்து வருவதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர். அப்பகுதி பாண்டியம்மாள் கூறியதாவது: கீழப்பெருமாள் பட்டியில் நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. ஊர் மந்தையில் கிராம சாவடி எதிரே நாடக மேடை உள்ளது. விழா காலங்களில் ஆடல் பாடல், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். நாடகமேடை கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் பல இடங்களில் 'சிமென்ட்' பூச்சுகள் பெயர்ந்துள்ளது. ஆங்காங்கே பல இடங்களில் தரைப்பகுதி சேதமடைந்துள்ளது. நீண்ட நாட்களாக 'பெயின்ட்' அடிக்காமல் களையிழந்துள்ளது. தரைப்பகுதியில் டைல்ஸ் கற்கள் அமைத்து நாடக மேடையை புதுப்பிக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை