உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆறாம் விரலான அலைபேசி

ஆறாம் விரலான அலைபேசி

மதுரை: மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் வக்பு வாரியக் கல்லுாரி, அம்பிகா கல்லுாரி இணைந்து தமிழ்க்கூடல் நடந்தது. செயின்ட் மேரீஸ் பள்ளி ஆசிரியர் சந்திரன் 'சிற்பியும் நாமே; சிற்பமும் நாமே' என்ற தலைப்பில் பேசியதாவது: இளமையாக இருக்கும்போதே நாம் விழித்துக் கொள்ள வேண்டும். நம்மை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். அலைபேசி கூட அவ்வப்போது தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. மனிதனின் ஆறாம் விராலாய் அலை பேசி இருக்கிறது. நேர்மறைச் சிந்தனையே வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். மாணவர்கள் நிறைய வாசிக்க வேண்டும் என்றார். விழாவினை சங்க ஆய்வு வளமையர் ஜான்சிராணி ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை