உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  திறன் பயிற்சி

 திறன் பயிற்சி

சோழவந்தான்: சோழவந்தான் அருகே விவேகானந்தா கல்லுாரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் சுவாமிநாதன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆசியுரை வழங்கினர். சிறப்பு விருந்தினர் முன்னாள் வேதியல்துறைத் தலைவர் ராஜேந்திரன் சுவாமி சித்பவானந்தரின் தொலைநோக்குப் பார்வையை வாழ்வாக்குதல், குருகுலத்தில் ஆசிரியரின் பொறுப்பு எனும் தலைப்பில் பேசினார். பேராசிரியர் ராஜ்குமார் தொகுத்து வழங்கினார். சேர்வார முத்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ