உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சிறிய ரக விமானம்; பேரிடர் சோதனை ஓட்டம்

 சிறிய ரக விமானம்; பேரிடர் சோதனை ஓட்டம்

அவனியாபுரம்: கேரளா கொச்சின் விமான நிலையத்திலிருந்து இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் நேற்று மதியம் 12:00 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தது. அந்த விமானம் மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒத்தக்கடை, சிலைமான், திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதிகளில் 14 முறை சுற்றி வந்தது. விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ''கொச்சியில் இருந்து இந்திய விமான போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான சிறியரக விமானத்தின்மூலம் தகவல் தொழில்நுட்பம், விமான நிலைய கட்டுப்பாட்டு அலை வரிசையின் செயல்பாடுகள், அவசரகால அழைப்புகள் ஆகியவற்றிற்கான சோதனை ஓட்டம் நடந்தது. ஆண்டுக்கு ஒரு முறை இந்த சோதனை ஓட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ