மேலும் செய்திகள்
மானாமதுரையில் பொங்கல் பானைகள் தயார்
23-Dec-2024
மேலுார்: சுந்தரராஜன்பட்டியில் மூலிகை தண்ணீர் கலந்த மண்ணில் தயாரிக்கப்படும் பொங்கல் பானைகளின் தேவை அதிகரித்துள்ளதால் விற்பனை களை கட்ட ஆரம்பித்துள்ளது.இவ்வூரைச் சேர்ந்த நல்லையன் 50, பொங்கல் பானையை 32 ஆண்டுகளாக தயாரிக்கிறார். அவர் கூறியதாவது: அழகர்கோவில் மலையில் இருந்து வரக்கூடிய மூலிகை தண்ணீர் தேங்கும் பொட்டமுத்தான், பலபட்டறை ஆண்ட கண்மாய்களில் இருந்து மணலை சேகரித்து பானைகள் செய்வதால் அதற்கு தனி சிறப்பு உண்டு. கால், அரை, முக்கால் மற்றும் ஒரு படி வரை பொங்கல் பானைகளும், பிற நாட்களில் சமைக்க, பருக என அனைத்து மண்பானைகளும் தயாரிக்கிறேன். ரூ.50 முதல் ரூ. 150 வரை விற்று வருகிறேன். வருமானம் குறைவாக இருந்தாலும் மனம் நிறைவாக உள்ளது என்றார்.
23-Dec-2024