திடக்கழிவு மேலாண்மை இலவச பயிற்சி
திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி சுற்றுச்சூழல் தகவல் விழிப்புணர்வு திறன் மேம்பாட்டு வாழ்வாதார திட்ட மையத்தில் கழிவு மேலாண்மை பயிற்சி முகாம் நடக்க உள்ளது.மத்திய சுற்றுச்சூழல் தகவல் விழிப்புணர்வு திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார திட்ட மைய ஒருங்கிணைப்பாளர், முன்னாள் டீன் வாசுதேவன், பேராசிரியர் ராமலிங்கம் சந்திரசேகர் கூறியதாவது: புதிய தொழில்நுட்பங்கள் நுண்ணுயிரிகள் வாயிலாக மக்கும் கழிவுகளையும் மறுசுழற்சி வாயிலாக மக்காத கழிவுகளையும் சிறந்த முறையில் மேலாண்மை செய்ய முடியும். வேலையில்லாத பட்டதாரிகளுக்கு இந்த தொழில்நுட்பங்கள் குறித்து 3 மாதம் இலவச பயிற்சி முகாம் கல்லுாரியில் நடக்கிறது. உணவு, தங்குமிடம் இலவசம்.சுயதொழில் துவங்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆர்வமுள்ளோர் www.tceeiacp.inஎன்ற இணையதளத்தில் பிப். 28க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94424 19316ல் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.