தினமலர் செய்தியால் தீர்வு
மேலுார் : முத்துச்சாமிபட்டி தெற்குப்பட்டி பகுதியில் 14 நாட்களுக்கு மேலாக இரவில் தொடர்ந்து மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. மக்கள் அன்றாட தேவைகளுக்கு மின் சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமலும் மேல்நிலைத் தொட்டியில் குடிநீர் ஏற்ற முடியாத நிலையும் ஏற்பட்டது. பயிர்கள் கருகின. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மின் செயற்பொறியாளர் கண்ணன் ஏற்பாட்டில் தற்போது தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. அதேசமயம் சில இடங்களில் தொய்வாக காணப்படும் மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும்.