மேலும் செய்திகள்
நுாபுர கங்கையில் அழகருக்கு திருமஞ்சனம்
24-Oct-2026
தீபாவளி பண்டிகை கோவில்களில் சிறப்பு பூஜை
08-Nov-2026
அழகர்கோவில்: அழகர் மலை மேல் உள்ள ஆறாவது படை வீடு சோலைமலை முருகன் கோயில். இங்கு இன்று (நவ.,23) காத்திகை மாத முதல் திங்கட்கிழமை சோமவாரத்தை யொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக உற்ஸவர், மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வித்தக விநாயகர் மற்றும் ஆதிவேல் சன்னதிகளிலும் சிவாச்சார்யார்களின் வேதமந்திரங்களுடன் சிறப்பு பூஜை, மஹா தீபாராதனை நடந்தது. மேலும் அழகர் மலை உச்சியில் உள்ள நுாபுர கங்கையில் பக்தர்கள் நீராடி, ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர். மலை அடி வாரத்தில் கள்ளழகர் - கருப்பணசாமி கோவிலிலும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
24-Oct-2026
08-Nov-2026