உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தந்தையை கொன்ற மகன் கைது

தந்தையை கொன்ற மகன் கைது

வாடிப்பட்டி : சமயநல்லுார் அருகே கட்டப்புளிநகர் மாரியம்மன் கோயில் தெரு ராஜேந்திரன் 65. இவர் மனைவி விஜயலட்சுமி யுடன் வசித்தார். நேற்று காலை வீட்டின் முன் செல்லும் கழிவு நீர் வாய்க்காலில் இறந்து கிடந்தார். ராஜேந்திரன் உடலில் இருந்த காயங்களை வைத்து சமயநல்லுார் போலீசார் விசாரித்தனர். இதில் வண்டியூரில் வசிக்கும் இவரது மகன் சதீஷ்குமார் 35, சொத்தில் பங்கு கேட்டு ராஜேந்திரனுடன் தகராறு செய்ததும், பின் மது போதையில் கயிற்றால் தந்தை கழுத்தை நெரித்தும் தலையில் அடித்தும் தள்ளி விட்டு சென்றது தெரிந்தது. இதில் ராஜேந்திரன் இறந்ததும் தெரிந்தது. சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி