தந்தையை கொலை செய்த மகன் கைது
அவனியாபுரம்:மதுரை, வில்லாபுரத்தைச் சேர்ந்த லோகநாதன், 60, மகன் கார்த்திக், 29. இவர், தீபாவளி சீட்டு பணத்திலிருந்து, 3 லட்சம் ரூபாயை தந்தை லோகநாதனுக்கு கொடுத்து இருந்தார்.பணத்தை திருப்பித் தருமாறு கார்த்திக் பலமுறை கேட்டும் அவர் தராததால், நேற்று முன்தினம் இரவில் லோகநாதனை, காய்கறி நறுக்கும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். நேற்று காலை அவனியாபுரம் போலீசில்சரண் அடைந்தவரைபோலீசார் கைது செய்தனர்.