மேலும் செய்திகள்
வரும் 8ல் கலை இலக்கிய போட்டிகள்
04-Sep-2024
மதுரை : திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் இந்திய அரசு விண்வெளித் துறையின் கீழ் இயங்கி வரும் 'இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்து வளாகம்' சார்பில் அக்., 4 முதல் 10 வரை உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு தமிழக அளவில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி நடக்க உள்ளது. கட்டுரை அனுப்ப வேண்டிய கடைசி தேதி செப்., 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 'விண்வெளி ஆய்வு நம் உலகை எப்படி மாற்றியுள்ளது' என்ற தலைப்பிலும், 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் 'காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதில் விண்வெளி நிறுவனங்களின் பங்கு' என்ற தலைப்பிலும் கட்டுரை எழுத வேண்டும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் கைப்பட, ஏ4 அளவு தாளில் 1,500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு தாளில் ஒரு பக்கம் மட்டும் எழுதி அனுப்ப வேண்டும்.பெயர், வயது, வகுப்பு, பெற்றோர் பெயர், பள்ளியின் பெயர், பள்ளி மற்றும் வீட்டு முகவரி, மொபைல் போன் எண் குறிப்பிட வேண்டும். இக்கட்டுரை தங்களால் தான் எழுதப்பட்டது என தலைமை ஆசிரியரிடமிருந்து ஒப்புதல் பெற்று கட்டுரையுடன் இணைக்க வேண்டும். உறையின் மேல் 'உலக விண்வெளி வார கட்டுரைப் போட்டி' என்று குறிப்பிட வேண்டும்.கட்டுரைகளை செப்., 30க்குள், நிர்வாக அதிகாரி, இஸ்ரோ உந்து வளாகம் - ஐ.பி.ஆர்.சி., மகேந்திரகிரி, திருநெல்வேலி - 627133 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு 94860 41737ல் தொடர்பு கொள்ளலாம்.
04-Sep-2024