இன்று முதல் சிறப்பு முகாம்
உசிலம்பட்டி: உசிலம்பட்டி வட்டார விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற இன்று(ஜூன் 26) முதல் ஜூன் 30 வரை உசிலம்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் நடக்கிறது. பிரதம மந்திரியின் கவுரவ நிதி, வேளாண் மற்றும் இதர துறைகளின் மானிய உதவி பெற, விவசாயிகள் அனைவரும் இந்த அடையாள எண் பெற்றிருந்தால் மட்டுமே நிதியுதவி பெற இயலும். விவசாயிகள் தங்களது கணினி சிட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட போன் எண் ஆகியவற்றுடன் வந்து பதிவு செய்து கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கிராமத்தில் நிலங்கள் வைத்திருக்கின்ற விவசாயிகள் தங்கள் பெயரில் மீண்டும் ஒரு முறை பதிவு செய்ய வேண்டும் என வேளாண் உதவி இயக்குநர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.