உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்

அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்

மதுரை: மதுரையில் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.அரசு மருத்துவமனையில் திங்கள், வியாழன் கிழமைகளிலும், உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாதத்தின் முதல், 3வது திங்கள் கிழமைகளிலும், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் முதல் செவ்வாய் கிழமையிலும், மேலுார் அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் முதல் புதன் கிழமையிலும் முகாம் நடைபெறுகிறது.எலும்பு முறிவு, கண், காது, மூக்கு, தொண்டை, மனநல மருத்துவர்கள் பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்க உள்ளனர். இதன்அடிப்படையில் அட்டை வழங்கப்படும். இதுவரை பெறாதவர்கள், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை நகல்கள், 5 போட்டோக்களுடன் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை