உள்ளூர் செய்திகள்

சிறப்பு முகாம்

எழுமலை: எழுமலை பேரூராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமினை பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், செயல் அலுவலர் ஜெயமுருகன், பேரையூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீனாகுமாரி, பேரூராட்சி உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர். மகளிர் உரிமைத்தொகை வேண்டி 460 மனுக்கள் உட்பட 771 மனுக்கள் பெறப்பட்டன. மேலுார் நாவினிப்பட்டியில் துணை கலெக்டர் பஞ்சாபிகேசன் தலைமையில் நடந்த முகாமில் 555 மனுக்கள் பெறப்பட்டன. தாசில்தார் செந்தாமரை, பி.டி.ஓ.,க்கள் சுந்தரசாமி, சரஸ்வதி மற்றும் 13 துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை