மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்
மதுரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம் மதுரையில் ஆறு வட்டாரங்களில் ஏப். 8 முதல் நடக்க உள்ளதாக கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஏப்.8ல் கள்ளிக்குடி சமுதாயக்கூடம், ஏப். 11 ல் செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி (பி.டி.ஓ.,) அலுவலகம், 15 ல் டி.கல்லுப்பட்டி பி.டி.ஓ., அலுவலகம், 17ல் சேடப்பட்டியில் உள்ள எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 19ல் மதுரை கிழக்கில் திருமோகூர் அரசு நடுநிலைப் பள்ளி, 21ல் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.அடையாள அட்டை பெற்றவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகள் வழங்குகிறது. இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஆதார் அடையாள அட்டை, 6 போட்டோ, இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் பங்கேற்கலாம் என்றார்.