உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வங்கி சார்பில் சிறப்பு திட்ட முகாம்

வங்கி சார்பில் சிறப்பு திட்ட முகாம்

பாலமேடு: பாலமேடு அருகே ராஜாக்காபட்டியில் எஸ்.பி.ஐ., வங்கி கிளை சார்பில் ஊரக பகுதிகளுக்கான சிறப்பு திட்ட முகாம் நடந்தது. மதுரை மண்டல மேலாளர் மதன் தலைமை வகித்தார். நிதி மேலாண்மை மேலாளர் ரம்யா முன்னிலை வகித்தார். கிளை மேலாளர் தனபால விக்னேஷ் வரவேற்றார். சேமிப்பு கணக்கு துவங்குதல், புதுப்பித்தல், பாரத பிரதம மந்திரி திட்டங்கள் குறித்து விளக்கினர். பாரத பிரதமர் திட்டத்தில் சேருவதற்கான படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டன. வாடிக்கையாளர் சேவை மைய பொறுப்பாளர் தவமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை