காவடி எடுத்த இலங்கை அகதிகள்
திருப்பரங்குன்றம் உலக தமிழர்கள் நலனுக்காக உச்சப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள தமிழர்கள் நேற்று காவடி, பால்குடம், முகத்தில் அலகு குத்தி, தீச்சட்டி, பறவைக்காவடி எடுத்து வந்தனர். திருப்பரங்குன்ற சரவணப் பொய்கையில் இருந்து நேற்று காலை 400க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் பால்குடங்களுடன் உச்சப்பட்டி முகாம் சென்றனர். அங்குள்ள சித்தி விநாயகர் கோயிலில் மூலவருக்கு பாலாபிஷேகம், பூஜை செய்து நேர்த்தி கடனை செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.