உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில பொதுக்கூட்டம்

மாநில பொதுக்கூட்டம்

மேலுார் : கீழையூரில் தமிழ்நாடு வடமாடு நலச்சங்க மாநில பொதுக்கூட்டம் நடந்தது. செயலாளர் சந்திரமோகன் வரவேற்றார். ஜல்லிகட்டு தலைவர் ராஜசேகரன், கவுரவ தலைவர் செல்வம் தலைமை வகித்தனர். மாநில தலைவர் அந்தோணி முத்து முன்னிலை வகித்தார். சட்ட விதிகளுக்கு உட்பட்டு போட்டி நடத்துவது, போட்டியில் விளையாடும் வீரர்கள் உயிரிழப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தால் நிவாரணம் வழங்குவது, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு அப்பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றினர்.இக் கூட்டத்தில் கவுரவ தலைவர் மகா சுசீந்திரன், மாவட்ட தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் பாரத் ராஜா, பொருளாளர் முத்துப்பாண்டி மற்றும் வடமாடு உரிமையாளர்கள் மற்றும் மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை