மாநில ஹாக்கி போட்டி
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தாய் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் கே.வி.முனியாண்டி சேர்வை நினைவு கோப்பை ஆண்கள் மாநில ஹாக்கி போட்டி 3 நாட்கள் நடந்தன.முதல் 4 இடங்களை முறையே மதுரை ஜி.கே.மோட்டார்ஸ் அணி, மதுரை ரிசர்வ் லைன், திருநகர் ஹாக்கி கிளப், விருதுநகர் ரெட் ரோஸ் அணிகள் பிடித்தன. பரிசளிப்பு விழாவிற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை வகித்தார். கோப்பை ரொக்கப் பரிசு வழங்கப்பட்டன. தொழிலதிபர் பாலராஜேந்திரன், தாய் பள்ளி நிறுவனர் காந்தி, மாநகராட்சி பொறியாளர் பாஸ்கர பாண்டியன், கவுன்சிலர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் கண்ணன், செயலாளர் ரமேஷ், கிளப் நிர்வாகிகள் சரவணன், வெள்ளைசாமி, ரமேஷ் நாகேந்திரன், காளிதாஸ், சந்திரமோகன் பங்கேற்றனர். கிளப் தலைவர் ராஜா நன்றி கூறினார்.