உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில கராத்தே போட்டி

மாநில கராத்தே போட்டி

மதுரை: பேரையூர் தாலுகா அத்திப்பட்டி ராமையாநாடார் மெட்ரிக் பள்ளியில், உலக ஷேடாகான பாரம்பரிய கராத்தே கூட்டமைப்பு சார்பில் மாநில அளவிலான கராத்தே சாம்பியன் ஷிப் போட்டிகள் நடந்தன. மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 13 பள்ளிகளின் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றனர். கராத்தே கூட்டமைப்புத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் சுமதி, பள்ளி முதல்வர் கற்பகமலர், கராத்தே கூட்டமைப்பு துணைத் தலைவர் சேதுராமன், துணைச் செயலாளர் ராஜலிங்கம் விழாவை துவக்கி வைத்தனர். ராமையா நாடார் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் ஷிப் பட்டம் வென்றது. பள்ளிச் செயலாளர் ஜி.மாரியப்பன் பரிசு வழங்கினார். ராமையா நாடார் மெட்ரிக் பள்ளியின் தலைவர் கிருபாநிதி, மேல்நிலைப் பள்ளித் தலைவர் அசோகன், செயலாளர் சுதந்திரசேகரன், பொருளாளர் ராஜசேகரன், பி.எம்.மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !