உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில கராத்தே போட்டிகள்

மாநில கராத்தே போட்டிகள்

திருமங்கலம் : உலக சோட்டா கராத்தே சம்மேளனம் சார்பில் திருமங்கலத்தில் நேற்று இரண்டாவது மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 6 முதல் 17 வயது வரையிலும், 17 வயது மேற்பட்டவர்கள் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் கட்டா, சண்டை பயிற்சி, கற்பனை சண்டை என பல்வேறு போட்டிகள் நடந்தன.இந்தியன் சிலம்பப் பள்ளி தலைவர் மணி தொடங்கி வைத்தார். உலக சோட்டா கராத்தே சம்மேளன செயலாளர் பால்பாண்டி வரவேற்றார். வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய, உலக அளவிலான கராத்தே போட்டிகளுக்கும் செல்ல முடியும் என செயலாளர் தெரிவித்தார். பொருளாளர் விக்னேஸ்வரன் நன்றி கூறினார். மாஸ்டர்கள் ஹரிகரன், காயத்ரி, சுபாஷ், நவாஸ் ஷெரிப் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை