| ADDED : செப் 16, 2026 03:27 AM
மதுரை: தென்காசியில் நடந்த 23வது மாநில சப் ஜூனியர் வூசூ சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை இன்பினிட்டி வாரியர்ஸ் அகாடமி மாணவர்கள் கலந்து கொண்டனர். 12 வயதுக்கான 34 கிலோ எடை பிரிவில் நேகன், மணிஷ், பாண்டி தங்கப் பதக்கம் வென்றனர். 36 கிலோ எடை பிரிவில் வெற்றி, ஜெய் வெள்ளி வென்றனர். 39 கிலோ எடை பிரிவில் அனிகா ராஜேஷ் வெண்கலம், தனித்திறமை பிரிவில் கவிஸ் வெள்ளி வென்றனர். 14 வயதுக்கான 60 கிலோ பிரிவில் முகமது சாலிக் தங்கம், 64 கிலோ பிரிவில் விஷ்வா தங்கம் வென்றனர். தங்கம் வென்றவர்கள் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர். மாநில அளவில் மதுரை அணி 3ம் இடம் பெற்றது. வூசூ சங்க மாநிலச் செயலாளர் ஜான்சன், மேற்பார்வையாளர் தங்கபாண்டியன், மாவட்ட தலைவர் பழனி குமார், பயிற்சியாளர் பிரபாகரன் பாராட்டினர்.