உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கதை எழுதும் போட்டி

கதை எழுதும் போட்டி

மதுரை:மதுரையில் புக் கில்டு ஆப் மதுரை சார்பில் 'கலாசார, வரலாற்று சிறப்பு நகரம் மதுரை' என்ற தலைப்பில் கதை எழுதும் போட்டிகள் நடந்தன. நிர்வாக இயக்குநர் நிக்கோலஸ் பிரான்சிஸ் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், 'கதை எழுதும் போட்டிகளின் மூலம் மாணவர்கள் பெறும் அனுபவங்கள், எதிர்காலத்தில் அவர்களை வழிநடத்தி, அவர்களின் படைப்புகளை தொழில்முறை வெளியீடுகளாக உருவாக்க உதவும்' என்றார். மதுரையின் சுற்றுலா, பண்பாடு, பாரம்பரியம், திருவிழாக்கள் போன்ற பல்வேறு கருப்பொருட்களை மையமாக புகைப்படங்களின் தொகுப்பு மாணவர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி முன்னாள் முதல்வர் வானதி பரிசு வழங்கினார். சுந்தர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை