உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயிர் காப்பீடு செய்ய முடியாமல் தவிப்பு

பயிர் காப்பீடு செய்ய முடியாமல் தவிப்பு

பேரையூர்: இதுவரை பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் தற்போது காப்பீடு செய்ய முடியாமல் அலைக் கழிப்புக்கு ஆளாகின்றனர். சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளவர்கள் சிட்டா, அடங்கல் வங்கி கணக்குப் புத்தகம், ஆதார் அட்டை கொண்டு பொது சேவை மையம் மூலம் காப்பீடு செய்யலாம். செப்.30 வரை காரிப் பருவத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர். தற்போது ராபி பருவத்தில் மதுரை, பிற மாவட்டங்களில் மக்காச்சோளம், சோளம், பருத்தி, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேளாண் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். கடந்தாண்டு காப்பீடு செய்த விவசாயிகள் மட்டுமே தற்போது காப்பீடு செய்ய முடிகிறது. புதியவர்கள், கடந்தாண்டு காப்பீடு செய்யாதவர்கள் தற்போது காப்பீடு செய்ய முடியவில்லை. புதிய விவசாயிகள், இதுவரை காப்பீடு செய்யாதவர்கள் சிட்டா, அடங்கல் வாங்கி பொதுச் சேவை மையம் சென்றால், அவர்களின் ஆதார் கார்டை வைத்து பயிர் காப்பீடு பதிவு செய்ய முடியவில்லை. இதனால் இவர்கள் ஒவ்வொரு பொதுச் சேவை மையமாக அலைந்து திரிகின்றனர். அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்ய அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி